மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள அனு கீர்த்தி வாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து..!

454

மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள அனு கீர்த்தி வாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில் திருச்சியை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் கலந்துகொண்டார். 30 போட்டியாளர்களுடன் மோதிய அவர், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி மிஸ் இந்தியா பட்டம் வென்று அசத்தினார். இந்தநிலையில், மிஸ் இந்தியா பட்டம் வென்றதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து அனு கீர்த்தி வாஸ் வாழ்த்து பெற்றார்.