ஆசிய யோகா போட்டியில் பதங்கம் வென்ற தமிழக வீரர்கள் 18 பேர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற 10-வது ஆசிய யோகா போட்டியில், இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர். இந்தநிலையில், பதக்கங்களை வென்ற தமிழக யோகா வீரர்கள் 18 பேரும், சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் இருந்தார்.