முதலமைச்சருடன் தமிழக அஞ்சல் துறை தலைவர் சந்திப்பு..!

375

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் சந்தித்து பேசினார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆகஸ்ட் 21ம் தேதி இந்தியா முழுவதும் இந்தியா போஸ்ட் பேமேண்ட் வங்கி சேவை தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதே போல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பதற்காக சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதன்மை அஞ்சல்துறை தலைவர் சம்பத் பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சென்னை மாநகர மண்ட அஞ்சல்துறை தலைவர் ஆனந்த் ஆகியோர் இருந்தனர்.

இதனிடையே ஆர்காடு நவாப் முகமது அப்துல் அலி மற்றும் அவரது மகன் நவாப் ஜாடா முகமது ஆசிப் அலி ஆகியோர் மரியாதை நிமித்தமாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர். தமிழக அரசு நிதித்துறையில் புதிய நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாகூர் அலி ஜின்னும், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.