கர்நாடக அரசின் நடவடிக்கை, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

377

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கை, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதி உள்ள கடிதத்தில் மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு தன்னிச்சையாக விண்ணப்பித்துள்ளது என்றும்
கர்நாடக அரசின் நடவடிக்கை, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிச்சாமி காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட கொடுத்த அறிக்கையை பரிசீலிக்கக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.