பிரதமர் மோடிக்கு முதல்வர் வாழ்த்து….

154

மக்களவை தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ளதை அடுத்து, பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிச்சாமி அனுப்பியுள்ள கடிதத்தில், பொதுத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வகையில், பாஜக அபார வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.இரண்டாவது முறையாக இந்திய மக்கள் மோடிக்கு பிரதமர் பதவி வழங்கி பெருமைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, பிரதமர் மோடி தலைமையின்கீழ், மத்திய அரசு மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.