தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை

151

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.கூட்டத்தில், தண்ணீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு குறித்தும், பிளாஸ்டிக் தடை மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரமாக செயல்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும் காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது எப்படி? மீறி பயன்படுத்துவோர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.