பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 20 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.