கார் பருவ சாகுபடிக்காக, பாபநாசம் உட்பட 3 நீர்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து உத்தரவு..!

272

கார் பருவ சாகுபடிக்காக, பாபநாசம் உட்பட 3 நீர்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வேளான் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று, 3 நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் 24ம் தேதியில் இருந்து அக்டோபர் 21ம் தேதி 120 நாட்களுக்கு திறந்துவிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 20 ஆயிரத்து 729 ஏக்கர் நிலைங்கள் பாசன வசதி பெறும் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.