எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்பட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

125

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்பட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பினை முதலமைச்சர் பழனிசாமி வாசித்தார். அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த துணைக்கோள் நகரமானது மத்தியப் பூங்கா, கூட்ட அரங்குகள் உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக அமையும் என்று குறிப்பிட்ட அவர், இதற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் நவீன வசதிகள் கொண்டதாக உருவாக்கப்படும் எனவும் கூறினார். தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் துவங்கிவிட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.