தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்….

114

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் செலுத்த வேண்டிய நில வரி முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர் கடனை மத்தியக் கால கடனாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,
வட்சியிலிருந்து மக்களை காக்க பெரும் பொருட் செலவு ஏற்படும் என்றும், இதனை ஈடுகட்ட மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதற்கான வறட்சி நிவாரண கோரிக்கை மனு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நெல் பயிர் ஏக்கருக்கு 5 ஆயிரத்து 465 ரூபாயும், மானாவாரி பயிருக்கு ஏக்கர் ஒன்றிக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர்,
தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
கிராமப்புற 100 நாள் வேலை திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கான தீவனபற்றாக்குறையை போக்க 78 கோடி ரூபாயில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.