எச்.ராஜா, கருணாஸ் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….

745

எச்.ராஜா, கருணாஸ் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,,,

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் கூறினார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றால் அது திமுக தான் என்று சுட்டிக் காட்டிய முதலமைச்சர், ஜெயலலிதா செய்த சாதனைகள் மக்களிடம் சென்று சேர்ந்திருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்…