கேரளாவுக்கு கூடுதலாக ரூ.5 கோடி நிதி..!

1137

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரலாறு காணாத மழையினால் 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக தேவதனை தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 500 டன் அரிசி, 300 டன் பால்பவுடர் அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். 15 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள், 10 ஆயிரம் போர்வைகளும் அனுப்பப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ குழுக்களும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ள முதல்வர் பழனிசாமி வெள்ள நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தோஷ் பாபு, டரேஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.