தண்ணீர் கேன் விநியோகம் செய்வதில் மோதல்…

304

நாமக்கல் அருகே தண்ணீர் கேன் வினியோகம் செய்வதில், ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கத்தியால் குத்தப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி பகுதியை சேர்ந்தவர், நடராஜன். இவர் அந்தப் பகுதியில், குடிநீர் கேன்களை வினியோகம் செய்து வருகிறார். இதேபோல், தண்டபாணி மற்றும் தங்கவேலு என்ற இருவரும், மற்றோரு குடிநீர் ஆலை மூலம் தண்ணீர் கேன்களை சப்ளை செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களை பிடிப்பதில் அவர்களுக்கு இடையே போட்டி உள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இதில், நடராஜன் தரப்பினர், தண்டபாணி மற்றும் தங்கவேலுவை கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.