மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

248

மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 50 நாட்களுக்கு மேலாகியும் பண பற்றாக்குறை நீங்காததால், பிரதமர் மோடி பதவி விலகக் கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரிமுனையில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர்கள், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 300க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.