சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக 4 லட்சம் மோசடி பவர் ஸ்டார் சீனிவாசன் மீது காவல்துறை வழக்குப்பதிவு!

371

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக நான்கு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு மிரட்டுவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தயாநிதி என்பவர் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பவர் ஸ்டார் சீனிவாசன் நான்கு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், இதுவரை சினிமாவில் நடிக்க எந்த வாய்ப்பும் வாங்கி தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேட்டால், எந்த பணமும் வாங்கவில்லை என்று பவர் ஸ்டார் மிரட்டுவதாகவும் தயாநிதி தனது மனுவில் கூறியுள்ளார். எனவே பவர் ஸ்டார் சீனிவாசனிடம் உரிய விசாரணை நடத்தி பணத்தை பெற்று தர வேண்டும் என தயாநிதி தனது புகாரில் கோரியுள்ளார். இந்த புகாரின்பேரில், வண்ணாரப்பேட்டை போலீசார் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.