முதலமைச்சரை சந்தித்த சினிமா துறையினர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்..!

334

கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் ஒன்றாம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் புது படங்களை வெளியிடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் பழைய படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 16ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரையுலகம் முடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு நேரில் சென்ற தமிழ்நாடு திரையரங்க சங்கத்தினர், திரைத்துறை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்.