கப்பலில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

293

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் துபாயிலிருந்து வந்த கப்பல் ஒன்றை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அந்த கண்டெய்னரில் பிளைவுட் பலகைகளுக்கு நடுவே அட்டை பெட்டிக்குள் இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. அந்த அட்டை பெட்டிகளில் மொத்தம் 17 லட்சம் சிகரெட்டுகள் இருந்தன என்றும் இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சிகரெட்டுகளை பறிமுதல் செய்து கடத்தி வந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.