தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்து | 13 பேர் பரிதாபமாக உயரிழப்பு

152

தென்னாப்பிரிக்காவில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த மாகாணத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு இந்த தேவாலயத்தில் புனித வெள்ளிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது மழை நீரில் நனைந்திருந்த தேவாலயத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 பேர் பரிதாகமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.