உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!

2464

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதல் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனைகளில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவு முதல் ஆலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
வாடிக்கன் பேராலயத்தில் கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் தலைமையில் புனித பீட்டர் சதுக்கத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதே போன்று, இயேசு கிறிஸ்து பிறந்த இடமான இஸ்ரேலில் உள்ள பெத்தலகேம் நகரிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிராத்தினை வழிபாடு நடைபெற்றது. கடும் குளிரிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் பிரசித்தி பெற்ற பெசன்ட் நகர், சின்னமலை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிராத்தனைகளை நடைபெற்றது.
சாந்தோமில் மயிலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டுப்பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.