உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.

726

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். உலகப் பாரம்பரிய சின்னமாகவும் ஆயிரத்து ஐந்து ஆண்டுகள் பழமையானதாகவும் விளங்கும் இக்கோயில் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுக்காட்டாக திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது. கொடிமரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள கொடி மரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மஹா ஆராதனை காட்டப்பட்டது.