சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட புதிய கும்கி யானை வரவழைப்பு..!

182

உடுமலைப்பேட்டை பகுதியில் போக்கு காட்டி வரும் சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி யானை சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள கண்ணாடி புத்தூர் பகுதியில் சின்னதம்பி யானையானது தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டுள்ள நிலையில் அங்குள்ள கரும்புகளை சாப்பிட்டும், தண்ணீரில் விளையாடியும் பொழுதை கழித்து வருகிறது. இதனையடுத்து, சின்னதம்பியை வனத்துக்குள் விரட்ட பொள்ளாச்சியில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இதில் கலீம் யானையுடன் சின்னதம்பி விளையாட தொடங்கியது, மேலும், கோபமாக இருந்த சின்னத்தம்பி யானையை பார்த்து பயந்த கும்கி மாரியப்பன் பின்வாங்கியது.

இதனைத்தொடர்ந்து, இரண்டு கும்கி யானைகளும் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நிலையில், சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி யானை சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சின்னத்தம்பியை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.