மதுரையை சின்னப்பிள்ளை பெருமாளுக்கு அவ்வையார் விருது ..!

179

மகளிரின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை பெருமாளுக்கு தமிழக அரசின் அவ்வையார் விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, பத்திரிகை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக தொண்டாற்றும் பெண்களுக்கு அவ்வையார் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுக்கு மதுரை மாவட்டத்த்தை சேர்ந்த 66 வயதான சின்னப்பிள்ளை பெருமாள் தேர்ந்து எடுக்கப்பட்டார். 30 ஆண்டு கால சேவையில் 2 ஆயிரத்து 589 சுய உதவிக் குழுக்களை உருவாக்கி கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றியது உள்ளிட்ட காரணங்களுக்காக அவ்வையார் விருதினை சின்னப்பிள்ளை பெறுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவ்வையார் விருதுக்கான 8 கிராம் தங்கப்பதக்கம், ஒரு லட்சத்திற்கான காசோலையை சின்னப்பிள்ளை பெருமாளுக்கு வழங்கி முதல்வர் பழனிசாமி கவுரவித்தார்.