எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லை என்றும், இந்திய ராணுவம் தான் எல்லைதாண்டி அத்துமீறலில்…

263

எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லை என்றும், இந்திய ராணுவம் தான் எல்லைதாண்டி அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சீன அரசு குற்றம் சாட்டி உள்ளது.
சிக்கிம் மாநிலம் டோகாலா நகரில் இந்திய, சீனா எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ பதுங்கு குழிகளை அழித்துள்ளது. இம்மாதத்தின் தொடக்கத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. இதனால் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. ஆனால் சீன அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லை என்றும் இந்தியா எல்லையான சிக்கிம் செக்டாரில் இந்திய ராணுவம் தான் எல்லையை தாண்டி சீனாவிற்குள் வந்தது என்றும், குற்றம் சாட்டி உள்ளது. இந்தியா, தன்னுடைய ராணுவத்தை எல்லையில் திரும்ப பெற வேண்டும் எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது.