களைகட்டியுள்ள சீன புத்தாண்டு கொண்டாட்டம் !

144

பிரேசிலில் இசைக்கருவிகள் ஒலிக்க, பாரம்பரிய நடனத்துடன் சீன புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிது.

சீன புத்தாண்டு பிறந்து 5 நாட்கள் ஆன நிலையில் பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரேசிலின் ஸா பாலோ நகரவாசிகள் பாரம்பரிய உடைகளுடன் சீன புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இசைக்கருவிகள் ஒலிக்க, பாரம்பரிய நடனமாடி அவர்கள் உற்சாக கொண்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, வண்ண மயங்களுடன் கூடிய டிராகன் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சீன உணவு வகைகளை ருசிப்பதில் ஐரோப்பிய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.