சீனாவில் பஸ் சுரங்கப்பாதை சுவரில் மோதிய விபத்தில் 36 பேர் பலியாகியுள்ளனர்.

309

சீனாவில் பஸ் சுரங்கப்பாதை சுவரில் மோதிய விபத்தில் 36 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் ஷன்சி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடந்த இந்த கோர விபத்தில் 36 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். செங்குடு நகரத்தில் இருந்து ஹெனான் மாகாணத்தில் உள்ள லோயாங் நகரத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து ஷன்சி மாகாண போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.