சீன நெடுஞ்சாலையில் வெடிப்பொருளை ஏற்றி வந்த லாரி மற்றொரு வாகனம் மீது மோதியது !

195

சீன நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் ஒன்று, மற்றொரு வாகனத்தின் மீது மோதி வெடித்து சிதறிய வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வெடிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு டிரக் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுனர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.