சீனாவை உலுக்கிய புயல் மழை காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 100- ஐ தாண்டியுள்ளது.

218

சீனாவில் ஜியாங்சூ மாகாணத்தில் கடந்த 18ம் தேதி முதல் புயலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததுடன் மணிக்கு 125 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.
மழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததுள்ளனர். யான்ஷெங் நகரில் பல வீடுகள் சேதம் அடைந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சீனாவில், பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த கனமழை காரணமாக, 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.