சீனாவில் சூறாவளியுடன் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 78 பேர் பலியாகினர்.

203

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியான்சு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. புயல் காற்றுடன் கனமழை பெய்ததில் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. ராட்சத அளவில் ஆலங்கட்டி மழை பெய்ததில், வீடுகளின் கூரைகள் கடுமையாக சேதமடைந்தன. யான்செங் நகரத்தை புயல் தாக்கியதில், மரங்களும் மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன.
மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பு காரணமாக, இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் புயல் காரணமாக, சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்த நிலையில், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சீனாவின் குயிசோசு நிலக்கரி சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்ததால், 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.