சர்ச்சைக்குரிய ஹம்பன்தோட்டா துறைமுக திட்டம் தொடர்பாக, சீனா இலங்கை இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.

405

சர்ச்சைக்குரிய ஹம்பன்தோட்டா துறைமுக திட்டம் தொடர்பாக, சீனா இலங்கை இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இலங்கையின் ஹம்பன்தோட்டா பகுதியில் சீனா, துறைமுகம் அமைக்கவும், கடற்படை தளம் உருவாக்கவும், ராஜபக் ஷே அதிபராக இருந்த போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஹம்பன்தோட்டாவில், சீன கடற்படையை அனுமதித்தால், இந்திய பெருங்கடலில், அச்சுறுத்தல் நிலவும் என்பதால், இந்தியாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கையின் அதிபராக சிறிசேன பதவியேற்ற பின், ஹம்பன்தோட்டா துறைமுகத்தில், வர்த்தக பணிகளை மட்டும் மேற்கொள்ள, சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த புதிய ஒப்பந்தம், இலங்கை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே, சீன தூதர் சியான்லியாங் இடையே கையெழுத்தானது. இந்த துறைமுகம் மூலம் கிடைக்கும் லாபத்தில் 70 சதவீதத்தை சீனாவும், 30 சதவீதத்தை இலங்கையும் பங்கீட்டு கொள்ள உள்ளன.