கிழக்கு சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் தற்போது கடலில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரான் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணைய் கப்பல் ஒன்று ஹாங்காங் சரக்கு கப்பலின் மீது மோதியது. சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து சுமார் 160 நாட்டிகல் மைல் தூரத்தில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று இந்த விபத்து நிகழ்ந்தது. கொளுந்து விட்டு எரிந்த கப்பலை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கிழக்கு சீனக் கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த கப்பலின் எண்ணெய் டாங்கர் வெடித்ததால் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. இதனையடுத்து ஈரான் எண்ணைய் கப்பலில் பணியாற்றிய 32 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஹாங்காங் கப்பலில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.