ஆயிரம் ரோபோட்டுகளை ஒன்றாக நடனம் ஆட செய்து சீனா புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

216

ஆயிரம் ரோபோட்டுகளை ஒன்றாக நடனம் ஆட செய்து சீனா புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
மனிதனை விஞ்சும் வகையில் பல்வேறு சாதனைகளை ரோபோக்கள்
நிகழ்த்தி வருகின்றன, அந்த வரிசையில், சீனாவின் தயாரிப்பில் உருவான ஆயிரத்து 7 ரோபோக்கள் ஒன்றாக இணைந்து, சுமார் ஒரு நிமிடம் இடைவிடாது நடனமாடி காண்போரை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து சென்றன. சீனாவின் கியுண்டாவ் நகரில் நடைபெற்ற பீர் திருவிழாவின் போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு ரோபோட்டும் 43.8 சென்டி மீட்டர் உயரம் கொண்டவை. இந்த ரோபோக்கள் அனைத்தும் ஒரே ஒரு செல்போன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு, சுமார் ஒரு நிமிடம் தொடர்ச்சியாக நடனமாடி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின.
இந்த அசத்தல் நடனம் புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது.
முந்தைய சாதனையை விட இருமடங்கு அதிமான ரோபோக்களை கொண்டு இந்த நடனம் நிகழ்த்தப்பட்டு இருப்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.