சீனாவில் அதிக வேலை பளு காரணமாக கடந்த ஆண்டில் 361 போலீசார் உயிரிழப்பு ..!

1765

சீனாவில் அதிக வேலை பளு காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 361 போலீசார் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் நாள் ஒன்றுக்கு 13 முதல் 15 மணி நேரம் வரை போலீசார் பணி புரிகின்றனர். இந்நிலையில் 2017-ம் ஆண்டில் மட்டும் 361 போலீசார் மரணம் அடைந்தனர். இவர்களில் 246 பேர் 43 வயதுக்கும் குறைவானவர்கள். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் இறந்தவர்கள் அணைவரும், குற்றவாளிகளை பிடிக்கும் போது உயிரிழக்கவில்லை என்றும் வேலைப்பளு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசாரின் வேலைப்பளுவை குறைக்க அறிவியல் பூர்வ ஆலோசனைகள் வழங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.