சீனாவில் பயணிகள் பேருந்து மேம்பாலத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

149

சீனாவில் பயணிகள் பேருந்து மேம்பாலத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் குஹான்சி பகுதியில் 42 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அங்கிருந்த மேம்பாலத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து , படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.