பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்து உரையாடினார்.

399

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்து உரையாடினார்.
ஐந்து நாடுகள் பங்கேற்கும் ஒன்பதாவது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் நடைபெறுகிறது. 5ம் தேதிவரை நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்ரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள ஜியாமென் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சீனாவின் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து மோடி உரையாடினார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் இந்திய-சீனா எல்லை பிரச்சனை, தீவிரவாதம் குறித்து பேசுவார் எனத் தெரிகிறது.