உலகிலேயே நீளமான புல்லட் ரயில் தடம் சீனாவில் திறப்பு…. பயண நேரம் குறையும் என அதிகாரிகள் தகவல்

206

சீனாவில் உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரயில் வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தது.
சீனாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலுள்ள ஷாங்காய், தென்மேற்குப் பகுதியிலுள்ள கன்மிங் ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய ரயில் தடம் திறக்கப்பட்டது. 2 ஆயிரத்து 252 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட உலகின் மிகப்பெரிய புல்லட் ரயில் வழித்தடமான இது ஷிஜியாங், ஜியாங்ஷி, ஹுனான், குவாங்ஷு, யுனான் ஆகிய 5 மாகாணங்கள் வழியாக செல்கிறது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 330 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் இதனால், ஷாங்காய் – கன்மிங் இடையிலான பயணம் 11 நேரமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.