சீனாவில் நடுக்கடலில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர்!

670

சீனாவில் நடுக்கடலில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர்.
ஈரானில் இருந்து தென்கொரியாவுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் டன் எண்ணெயுடன் கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. சீன கடல் எல்லையில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு கப்பலுடன் அந்த கப்பல் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், ஈரான் கப்பலில் பயணம் செய்த ஊழியர்கள் 32 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் ஈரான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மீட்புப்பணிக்காக சீனாவிலிருந்து எட்டு கப்பல்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.