வெளி நாட்டு பூங்காவில் உள்ள தங்க மயிலின் முகம், டிரம்ப்பின் முகம் போன்ற தோற்றத்தை உடையதாக சீன ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.

474

வெளி நாட்டு பூங்காவில் உள்ள தங்க மயிலின் முகம், டிரம்ப்பின் முகம் போன்ற தோற்றத்தை உடையதாக சீன ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.
சீன நாட்டின் செஜியான் மாகாணத்தில் உள்ள சபாரி பூங்காவில் பல்வேறு,
பறவைகள் உள்ளன. இந்த நிலையில், அங்குள்ள சிறிய சிவப்பு நிற தங்க மயில் ஒன்று தோற்றத்தில் டொனால்ட் டிரம்ப்பை போன்று உள்ளதாக புகைப்படங்கள் பரவின. இதனை பார்த்த பூங்காவின் ஊழியர்களும், தங்க மயில் தலை முடி மற்றும் கண்களின் அசைவு ஆகியவை டிரம்ப்பை போலவே உள்ளதாக தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.