சீனாவை மிரட்டி வரும் சக்திவாய்ந்த நிடா புயல், ஹாங்காங் நகரை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

315

சீனாவை மிரட்டி வரும் சக்திவாய்ந்த நிடா புயல், ஹாங்காங் நகரை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவை நோக்கி நகர்ந்து வரும் நிடா புயலினால், அங்கு பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது. இந்த நிலையில், ஹாங்காங் நகரை 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியது. இதனால் ஹாங்காங் நகரம் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளது. நிடா புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் பிரதான சாலைகள் மற்றும் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வாகன போக்குவரத்து அறவே முடிங்கியுள்ளது. ஹாங்காங்கிலிருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 300 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகி உள்ளது. ஹாங்காங்கை பதம்பார்த்த நிடா புயல், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. ’நிடா’ புயல் படிப்படியாக
வலுவிழந்து வந்தாலும், சீனாவில்மி கப்பெரிய பாதிப்பை உருவாக்கலாம் எனக் கருதப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள.