நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் மிகப்பெரிய விமானம் | வெற்றிகரமாக சோதனை செய்து சீனா சாதனை..!

1770

நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தை சீனாவில் முதல் முறையாக வெற்றிகரமாக சோதனை செய்தது.
சீன அரசுக்கு சொந்தமான விமான தயாரிப்பு நிறுவனமான விமான தொழில்துறை கழகம், நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக் கூடிய விமானத்தை வடிவமைத்துள்ளது. ஏஜி600 ரக இந்த விமானத்திற்கு குன்லாங் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. ஜின்வான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட
இந்த விமானம் ஒரு மணி நேரம் வானில் பறந்து வெற்றிகரமாக ஓடுதளத்தில் தரையிறங்கியது. இந்த சோதனை வெற்றிக்கரணமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.