சீனாவில் கடற்படையினர் போர் விமானங்கள், மற்றும் போர் கப்பல்களை கொண்டு மிகப்பெரிய ஒத்திகை நடத்தப்பட்டது.

249

சீனாவில் கடற்படையினர் போர் விமானங்கள், மற்றும் போர் கப்பல்களை கொண்டு மிகப்பெரிய ஒத்திகை நடத்தப்பட்டது.
அண்டை நாடுகளின் தாக்குதலை எதிர் கொள்ள சீன கடற்படையினர் அவ்வப்போது ஒத்திகை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சீனாவின் தெற்கு கடற்கரை பகுதியில் ஒத்திகையில் ஈடுபட்ட கடற்படையினர் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவை கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் பீரங்கிகளை தாங்கிய கப்பலை கொண்டு நடுக்கடலில் வெடிக்க வைத்தும் கடற்படையினர் போர் ஒத்திகை நடத்தினர்.