அதிவேக புல்லட் ரயில் ஜி 7 ஃபக்ஸிங் அறிமுகம்..!

351

சீனாவில் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் சேவை தொடங்கியுள்ளது.

இரு நகரங்களுக்கும் இடையிலான, ஆயிரத்து 318 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஜி 7 ஃபக்ஸிங் என்று பெயரிடப்பட்ட புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில், மூன்றரை மணி நேரத்தில் பீஜிங்கில் இருந்து ஷாங்காய் நகரத்திற்கு வந்து சேரும். 400 மீட்டர் நீளத்தில் 16 பெட்டிகளுடன் இருக்கும் ஜி 7 ரயிலில், ஒரே நேரத்தில் ஆயிரத்து 200 பேர் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.