போருக்கு தயாராக இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்…!

402

போருக்கு தயாராக இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 2-வது முறையாக அதிபர் ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சீன ராணுவ ஆணையத்தின் கூட்டத்தையும், ராணுவ அதிகாரிகள் கூட்டத்தையும் அவர் கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசிய அதிபர் ஜின்பிங், ராணுவம் முழுமையாக கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். போருக்கு தயார் நிலையில் இருப்பதோடு மட்டுமின்றி, போரில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களையும் வகுத்து வைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பாதுகாப்புத் துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறிய அவர் 21 ஆம் நூற்றாண்டின் உலகின் மிகச்சிறந்த முன்னணி ராணுவம் என்ற பெருமையை சீனா பெற வேண்டும் என தெரிவித்தார்.