வீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

224

சிலி நாட்டில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிலி நாட்டின் பியூர்ட்டோ மாண்ட் என்ற இடத்திலிருந்து, 5 பயணிகள் மற்றும் விமானியுடன் ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டது. அடுத்த சில நொடிகளில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேல் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.