அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்..!

191

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபரின் மகள் 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறார். மாற்றுத் திறனாளியான இவரை அதே அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்து வரும் பாதுகாவலர்கள் , லிப்ட் ஆபரேட்டர்கள் , பிளம்பர் , எலக்ட்ரீசியன் உள்ளிட்டோர் கடந்த 7 மாதங்களாக மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட குடியிருப்பில் சிறுமி அடையாளம் காட்டிய 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். பாலியல் பலாத்கார சம்பவம் உறுதிசெய்யும் வகையில் இருந்ததால் 17 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.