பச்சிளம் குழந்தை கால்வாயில் இருந்து மீட்பு..!

363

சென்னை வளசரவாக்கத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கழிவு நீர் கால்வாயில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாகத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஒன்றின் அருகே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து அந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தை ஒன்று கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அந்த குழந்தையை வீசிச் சென்ற கொடூர குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.