13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு |16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

121

சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை , லிப்ட் ஆப்ரேட்டர்கள், வாட்ச் மேன்கள் என 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனயடுத்து வழக்கில் தொடர்புடைய 17 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இந்நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்திருந்து தங்களை விடுவிக்கக் கோரி 16 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 16 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.