வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

208

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் குழந்தை சாய்தர்ஷன். பிரகாஷின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சாய்தர்ஷன் அவனது பாட்டி வீட்டில் தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த சாய்தர்ஷனை, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கடத்தி சென்றுள்ளான். இதனை பார்த்த சிறுமி சத்தம்போட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் வெளியே வருவதற்குள், மர்ம நபர் சாய் தர்ஷனுடன் மாயமானான். குழந்தையின் பாட்டி அளித்த புகாரின் பேரில், மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.