முன்னாள் அமைச்சர் கபில்மிஸ்ரா இன்று டெல்லி சட்டசபையில் ஆம்ஆத்மி எம்எல்ஏ-க்களால் சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. .

427

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறிய முன்னாள் அமைச்சர் கபில்மிஸ்ரா இன்று டெல்லி சட்டசபையில் ஆம்ஆத்மி எம்எல்ஏ-க்களால் சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. .
டெல்லி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கபில் மிஸ்ராவை, அவையில் இருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் திடீரென சுற்றி வளைத்து அடித்து, உதைத்தனர். அவையில் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால், சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து, விரைந்து சென்ற அவைக்காவலர் கபில்மிஸ்ராவை, மீட்டு வெளியே அழைத்துச்சென்றனர். எதிரபாராத தாக்குதலில் நிலைகுலைந்து வெளியே வந்த கபில்மிஸ்ரா, அவையில் ஆம்ஆத்மி எம்எல்ஏ-க்களால் தாக்கப்பட்டதாக கூறினார். முதலமைச்சரின் அடியாட்களுக்கு பயப்படமாட்டேன் என்று கூறிய அவர், இந்த சம்பவத்தை சிரித்துக்கொண்டே முதலமைச்சர் கெஜ்ரிவால் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், துணைமுதல்வர் மனீஷ் சிசோடியா தூண்டுதலின்பேரில் தாக்குதல் நடைபெற்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.