முதலமைச்சர், அமைச்சர்களை தகுதியிழக்க கோரிய வழக்கு எடப்பாடி பழனிசாமி உள்பட 5 அமைச்சர்களுக்கு நோட்டீஸ்

280

சசிகலாவை சிறையில் சென்று சந்தித்து ஆலோசனை கேட்டது தொடர்பாக முதலமைச்சர் உள்பட 5 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரிவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் தாமரைக்கனி மகன் ஆணழகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இது தொடர்பாக மனு அளித்திருந்தார். அதில் தமிழக அரசை வழிநடத்துவது குறித்து சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை கேட்டது தொடர்பாக அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூவை தகுதியிழக்க செய்ய வலியுறுத்தி இருந்தார். அத்துடன் அமைச்சர்களை கண்டிக்காத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் முதலமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக சட்டப்பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.