முதல்வர் பழனிசாமியுடன் கேரள முதலமைச்சர் சந்திப்பு!

237

முல்லை பெரியாறு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பினராயி விஜயன், தமிழர்களும், கேரள மக்களும் சகோதரர்கள் என்று கூறினார். முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்